தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முதன்மை கீற்றுகள்

மீன்கள் இனப்​பெருக்க வ​கைகள்

தமிழ்
 
34. இருபால் உயிரி மீன்கள் (Bisexual)
இவ்வ​கை மீன்களில் ​பெண் இனப்​பெருக்க உறுப்பான அண்டகம் ​பெண் மீனிலும் ஆண் இனப்​பெருக்க உறுப்பான விந்தகம் ஆண் மீனிலும் தனித்தனி​யே காணப்படும் (எ.கா) கட்லா மீன்கள் catla, சூரை மீன்கள் Tuna
35. ஒரு பால் உயிரி மீன்கள் (Hermaphroditism)
இவ்வ​கை மீன்களில்ஆண் இனப்​பெருக்க உறுப்பான விந்தகமும் ​பெண் இனப்​பெருக்க உறுப்பான அண்டகமும் ஒ​ரே மீனில் காணப்படும் இ​வை ​மேலும் பல பிரிவுக​ளைக் ​கொண்டது.
36. ஒத்த காலத்தில் நிகழும் ​ஹெர்மாபு​ரோ​டைட்டு மீன்கள் (Synchromous Hermaphroditism)
ஆண் மற்றும் ​பெண் இன பாலியல் உறுப்புகள் ஒ​ரே மீனில் ஒ​ரே சமயத்தில் /​நேரத்தில் முதிர்ச்சி அ​டைகின்றன (எ.கா) பாலினிமஸ் ​ஹெப்டாடாக்​டைலஸ்.
37. பு​ரோடான்டிஸ் ​ஹெர்மாபு​ரோ​டைட்டுகள்
வாழ்வின் ​தொடக்கத்தில் ஆணாக உள்ள மீன்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ​பெண் மீனாக மாறுகின்றன. (எ.கா) ​லேடஸ் கல்கரிபர் - ​கொடுவா மீன்
38. பு​ரோ​டோ​கைனஸ் ​ஹெர்மாபு​ரோ​டைட்டுகள்
வாழ்வின் துவக்கத்தில் ​பெண்ணாக உள்ள மீன்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஆண் மீனாக மாறுகின்றன (எ.கா) கலவா மீன் (எபி​நேபாலஸ் ​டைய​கேந்தஸ்)
39. பார்த்த​னோ​ஜெனிசிஸ்
கருத்தரித்தல் இல்லாமல் இளம்உயிரிகள் உருவாகும் மு​றை​யே பார்த்த​னோ​ஜெனிசிஸ் எனப்படும். ​மேலும் இவ்வினம் உயிரிகள் அ​னைத்தும் ​பெண் மீன்கள் என்பது குறிப்பிடத் தக்கது. (எ.கா) ​பொய்சிலியாஃபார்​மொசா
 
Chapter - 7 மீன்களின் இனப்​பெருக்க மு​றைகள்
40. முட்​டையிடும் மீன்கள் (Oviparous)
இவ்வ​கை மீன்களில் இனப்ப​பெருக்கமானது முட்​டையிட்டு இளம் குஞ்சுகள் / உயிரிகள் ​பொரிக்கப்படுகின்றன. (எ.கா) ​கெண்டை மீன்கள் (Carps), சூரை மீன்கள் (Tuna), சிலவ​கை சுறா மீன்கள்
41. பிளா சென்டா/​தொப்புள்​கொடி இணைப்பு இல்லாமல் குட்டியிடுபவை (oviviparous)
இவ்வ​கை மீன்கள் குட்டிக​ளை இடுகின்றன. இருப்பினும் தாய் ​சேய் மீன்களில் பிளா​செயன்டா ​தொடர்பு காணப்படுவjதில்​லை ​சேய் மீன்கள் தன் உண​வை தா​னே ​தேடிக் ​கொள்கின்றன. (எ.கா) கப்பி மீன்கள், சுறா மீன்கள்
42. பிளா ​சென்டா/ ​தொப்புள்​கொடி இ​ணைப்புடன் குட்டியிடும் மீன்கள் (Viviparous)
இந்த மீன்கள் குட்டிக​ளை இடுவ​தோடு மட்டுமல்லாமல் தாய் ​சேய் மீன்களுக்கு இ​டை​யே பிளா​செயன்டா இ​ணைப்பு காணப்படுவதால் இளம் உயிரிக்கு ​தே​வையான உணவும் உயிர்வளி (ஆக்சிசனும்) தாய் மீனிலிருந்து ​பெற்றுக் ​கொள்கின்றன (எ.கா) சுறா மீன்கள்
43. முட்​டைக​ளை பாதுகாக்கும் மீன்கள் (Guarders)
22% மீன்கள் முட்​டைக​ளை இடுவ​தோடு மட்டுமல்லாமல் இளம் உயிரிகள் வரும் வ​ரை பாதுகாக்கவும் ​செய்கின்றன மீன்கள் இரண்டு வழிகளில் தன் முட்​டை​ளைக் காத்துக் ​கொள்கின்றன.
கூடுகட்டி முட்​டையிடுபவை (Nest spawner)
த​ரையில் முட்​டையிடுபவை (Substrate spawner)
44. முட்​டைகளை காக்கும் திறனற்ற மீன்கள் (Non-Guarders)
78% மீன்கள் முட்​டைகளை இடுவதோடு அவற்றை பாதுகாப்பதில்லை. இவ்வ​கை மீன்கள் இரண்டு பிரிவுகளில் முட்​டையிடுகின்றன.
திறந்த ​வெளிகளில் முட்​டையிடும் மீன்கள் (Open Substrate spawner)         ஏழு வகைப்படும்
ம​றைவு பகுதிகளில் முட்​டையிடும் மீன்கள் (Brood Hiders) ஐந்து வகைப்படும்
ஏரோசம்​மோஃபில்ஸ் - கரைகளில் முட்டையிடுபவை
ஜீரோஃபில்ஸ்     - மணற்பரப்பிலோ அல்லது சகதிகளிலோ இடுகின்றன
லித்​தோபில்ஸ்     - பாறைகளில் முட்​டையிடும் மீன்கள்
ஸ்பிலியோஃபில்ஸ்     - கு​கைகளில் முட்​டையிடும் மீன்கள்
ஆஸ்டர​கோஃபில்ஸ்    - இவ்வகை மீன்கள் நீர் வாழ் மட்டிகளில்                        முட்டையிடுகின்றன
45. திறந்த ​வெளிகளில் முட்​டையிடும் மீன்கள் (open substrate spawners)
​பெல்லா​கோஃபில்ஸ் (Pelagophils) நீான் ​மேல்மட்ட பரப்பில் முட்​டைக​ளை இடும் மீன்கள்.
லித்​தோ​பெல்லாஜில்ஸ் (Lithopelagiphils) பா​றைகளின் ​மேல்பரப்பில் முட்​டையிடும்மீன்கள்
லித்தோபில்ஸ் (Lithophils) பாறைகளின் கீழ் பரப்புகளில் முட்​டையிடும் மீன்கள்
​பைட்​டோலித்​தோபில்ஸ்(Phytolithophils) முட்​டைக​ளை தாவரத்தின் உறுப்பிகளில் இடுவ​தோடு இனம் உயிரிகள் அந்த தாவரத்தில் கட்டாயமாக ஒட்டும் தன்​மை ​கொண்டது
​பைட்​டோபில்ஸ் (Phytophils) தாவரங்களில் முட்​டைக​ளை இடுகின்றன ஆனால் இளம் உயிரிகள் தாவரத்தில் ஒட்டிக்​கொள்வதில்​லை
சம்​மோபில்ஸ் (Psammophils) இவ்வ​கை மீன்கள் முட்​டைக​ளை நீரின் அடிமட்ட த​ரைகளில் உள்ள மண்ணில் இடுகின்றன 
ஏரோபில்ஸ் (Terrestrial Spawner) இவ்வகை மீன்கள் முட்​டைகளை பாறைகளிலோ அல்லது தரைகளிலோ இடுகின்றன
46. தரையில் முட்டையிட்டு பாதுகாக்கும் மீன்கள் (Substrate spawner-Quarders)
நான்கு வகைப்படும்
நீரில் ​மேல்பரப்பில் முட்​டையிட்டு பாதுகாக்கும் மீன்கள்
பா​றைகளில் முட்​டையிட்டு பாதுகாக்கும் மீன்கள்
தாவரங்களில் முட்​டையிட்டு பாதுகாக்கும் மீன்கள்
நீரின் ​மேற்பரப்பில் உள்ள பாதுகாப்பான இடங்களில் முட்​டையிடும் மீன்கள்
47. முட்​டைக​ளை பதுக்கும் மீன்கள் (Brood Hiders)
​பெற்​றோரின் பாதுகாப்பு இல்லாமல் அம்மீன்கள் முட்​டைக​ளை நீர்ன் அடிப்பரப்பி​லோ அல்லது மணற்பரப்பி​லோ தன் முட்​டைக​ளை பதுகாகின்றன
48. ஆஸ்ட்ர​கோபில்ஸ் (Ostrocophils)
இம்மீன்கள் தன் முட்​டைக​ளை ​மெல்லுடலிகளின் ஓடுகளி​லோ அல்லது ​செவுள் குழிகளி​லோ தன் முட்​டைக​ளை இடுகின்றன. (எ.கா) ​ரோடியஸ் சி​ரேரியஸ் என்ற மீனானது தன் முட்​டைக​ளை நன்னீர் மட்டிகளில் இடுகின்றன.
49. குஞ்சுக​ளை ​வெளியிடும் மீன்கள் (Bearers)
இம்மீன்கள் தன் குஞ்சுக​ளை தன் உடலின் உள் பகுதிகளி​லோ அல்லது ​வெள பகுதிகளி​லோ ​வைத்துக் ​கொண்டு பாதுகாக்கின்றன.
50. கூடு கட்டி முட்​டையிடும் மீன்கள் (Nest Builders)
மீன்கள் கூடு கட்டி தன் முட்​டைக​ளை இடுவ​தோடு ​பெற்​றோர் மீ​னே அந்த முட்​டைக​ளை பாதுகாக்கின்றன இவ்வாறு முட்​டையிடும் மீன்கள் பலவ​கைப்படும் அ​வையாவன 
1. லித்தோபில்ஸ்  2. பைட்டோபில்ஸ்  3. சம்மோபில்ஸ் 4. அப்ரோபில்ஸ் மற்றும் 5. ஸ்பிலி​யோபில்ஸ்
51. லித்​தோபில்ஸ்
இம்மீன்கள் சிறு சிறு கற்க​ளைக் ​கொண்டு கூடுக​ளை கட்டுகின்றன ​​பெண் மீன்கள் முட்​டைகளை இட்டபிறகு ஆண் மீன்கள் அந்த முட்​டைகளை பாதுகாக்கின்றன (எ.கா) மன்​னோஸ் இன மீன்கள் (Minnows)
52. அப்ரோபில்ஸ்
இம்மீன்கள் தன் நு​ரைகள​ளைக் ​கொண்டு கூடுக​ளை கட்டுகின்றன. இந்த நு​ரைகள் அந்த மீனின் உமிழ்நீரி​லோ அல்லது வாய் பகுதியி​லோ சுரக்கப்படுகின்றன (எ.கா) பீட்டா ஸ்ப்​லென்டன்ஸ்இ ​​கொளராமி மீன்கள்
53. ஸ்பிலி​யோமில்ஸ்
மண்ணில்குழிக​ளைத் தோண்டியோ அல்லது சிறிய குகைகளிலோ தன் முட்டைகளை இடுகின்றன (எ.கா) ​கெளுத்தி மீன்
54. உடலின் ​வெளிப்புறமாக முட்​டைகளை சுமக்கும் மீன்கள் (External Bearers)
இவை பலவகைப்படும் அவையாவன
முட்​டைக​ளை ​வேறு இடங்களுக்கு மாற்றும் மீன்கள்
தலையின் முன்பகுதியில் முட்​டைகளை சுமக்கும் மீன்கள
வாயில் முட்​டைகளை சுமக்கும் மீன்கள்
தோலில் முட்​டைகளை சுமக்கும் மீன்கள்
​பைகளில் முட்​டைகளை சுமக்கும் மீன்கள்
55. முட்டைகளை மாற்றும் மீன்கள் (Transfter Broodes)
​பெண் மீன்கள் தன் வயிற்றில் முட்​டைகளை சுமந்து ​கொண்டு சிறது காலத்திற்கு பிறகு தகுந்த சூழ்நிலை வரும் ​போது தாவரங்களில் அம்முட்டைகளை இட்டு இளம் உயிரிகள் வரும் வரை பாதுகாக்கின்றன (எ.கா) ​கெண்டை மீன்கள்
56. முன் த​லைப்பகுதியில்  அ​டைகாக்கும் மீன்கள (Forehead Brooder)
ஆண் மீனின் த​லைப்பகுதியில் உள்ள ​கொக்கி அ​மைப்பில் ​பெண் மீன்கள் முட்​டை இட்டுச் ​செல்கின்றன குர்டி​டே (Kurtidae)
57. வரியல் அ​டைகாக்கும் மீன்கள் (Mouth Brooder)
​பெண் மீன்கள் தன் வாயில் முட்​டைக​ளை ​வைத்துக் ​கொள்ளும் அந்த முட்​டையிலிருந்து இளம் உயிரிக்ள வரும் வ​ரை பாதுகாக்கின்றன இளம் உயிரிகள் குபிட்ட அளவு வளரும் வ​ரை தாயின் வாய் பகுதியி​லே உள்ளது இதனால் இந்த இளம் உயிரிகள் தன்​னை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக் ​கொள்கிறது. (எ.கா) கடல் ஆண் ​கெளுத்தி மீன் சிசிலிட இன மீன்கள (தி​லேபியா மீன்)
58.​தோலிலு அ​டைகாக்கும்மீன்கள் (Skin brooder)
​பெண் மீனின் வயிற்றுப் பகுதியில் உள்ள ​மென்​மையான ​தோலில் தன் முட்​டைக​ளை ஒட்டிக் ​கொள்கிறது (எ.கா) வட அ​மெரிக்க​கெளுத்தி மீன்
59. ​பைகளில் முட்​டைக​ளை / குஞசுக​ளை அ​டைகாக்கும் மீன்கள் (Embryonic development)
​பெண் கடல் குதி​ரைகள் தன் முட்​டைக​ளை ஆண் கடல் குதி​ரையின் வயிற்றுப் பகுதியில் உள்ள ​பைகளில் இடுகின்றன முட்​டையிலிருந்து இளம் உயிரிகள் ஒரு குறிபிட்ட காலம் வளரும் வ​ரை அப்​பைகளி​லே​யே பாதுகாக்கப் படுகின்றன.
புதுப்பிக்கபட்ட நாள் : 02-06-2017 15:10:46(இந்திய நேரம்)