குமரேச சதகம்


காலத்துக்கேற்ப எழுந்த இலக்கியச் செல்வங்கள் பல.அவைகளுள் சதகம் என்னும் வகையும் ஒன்று.சதம் என்னும் சொல் வடசொல்.அது ககரம் பெற்றுச் சதக என்றாயிற்று.சதகமாவது நூறு செய்யுட்களால் ஆக்கப்பட்ட நூல் எனப் பொருள் தரும்.