பேய் ஆவாரை

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Cassia occidentalis.

குடும்பம் : Caesalpiniaceae

வளரிடம் : இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.

வளரியல்பு : பரந்த சிறுபுதர் அல்லது புதர்செடி இரு சிற்றிலைகளில் முடியும். சிறகு கூட்டிலை, மணமுடையது. மஞ்சரி காம்பு சிறியது. சிவந்த ஓரங்களை உடைய மஞ்சள் மலர்கள் குறைவான எண்ணிக்கையில் காணப்படுகின்றன. வெடிகனிகள் தட்டையாகச் சற்று வளர்ந்து காணப்படும். விதைகள் 25-30 மலர்களும் கனிகளும் வருடம் முழுவதும் குறிப்பாக ஜூலை-நவம்பர்.

மருத்துவப் பயன்கள் : விதைகள்-இலைகள் தோல் வியாதிகளக்கு வெளிப்புறப்பூச்சாகப் பயன்படுகின்றன. வேர் சிறுநீர்க் கழிவைத் தூண்டுகின்றன. நோய் தொடர்ந்து ஏற்படுவதைத் தடுக்கும்.