சின்னி செடி / சோத்தாச்செடி

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : : Acalypha fruticosa Forsk.

குடும்பம் :Euphorbiaceae

வளரிடம் : மலையடி வாரங்கள், முட்புதர்க் காடுகள் வளமுடனும், மிகுந்த பரவலாகவும் காணலாம்.

வளரியல்பு : அடர்புதர் போன்ற சிறு செடி. இலைகள் முட்டை வடிவின. கீழே இளம் மஞ்சள் வண்ண சுரப்பிகள் கொண்டவை. பெண் மலர்கள் 3-5 , ஆண் மலர்கள் கதிரின் நுனியில் உள்ளன. மலரிதழ்கள் மென் உரோமங்கள் பரவியவை. மகரந்தபைகள் கோளம் – நீண்டு உருண்ட வடிவானவை, பூவடிச் செதில்கள் மணிவடிவின, கனிகள் 1-12 வரை.

மருத்துவப் பயன்கள: உடல் தேற்றல், நஞ்சு நீக்குதல், செரிமானம் மிகுதல் ஆகியன. இலையுடன் வெங்காயம் சேர்த்தரைத்துச் சாப்பிட்டு வர கடி நஞ்சுகள் அகலும். வேர்க் கசாயம் குடித்து வர சிறுநீர்த் தொற்றும் அகலும். பசுந்தாள் உரமாக விவசாயிகளுக்குப் பயன்படுகிறது.