சோழி (Cowry)
ஏறத்தாழ 4000க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சோழிகளைக் குறித்து வெளி வந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுவர். இச்சோழிகளைப் பற்றிய அறிவியல் ஆய்வுகள் ஏறத்தாழ 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. எனினும் தமிழகச் சோழிகளைக் குறித்த ஆய்வுகள் அதிகமில்லை எனலாம். நாணயங்கள் புழக்கத்திற்கு வரும் முன்னர் பண்டமாற்று முறையில் நாணயச் சோழிகளைக் (money cowry) கொடுத்து பொருள்களை மாற்றிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. *அழகிய வண்ணங்களைக் கொண்ட இச்சோழிகள் தற்போது அலங்காரப் பொருள்களாகவும், விளையாட்டுக்குப் பயன்படும் பொருள்களாகவும் (தாயம், பல்லாங்குழி போன்ற) ஆடை அணி மணிகளிலும் பெருமளவில் பயன்பட்டு வருகின்றன.
மெல்லுடலிகள் இனத்தைச் சார்ந்த மற்ற சங்கு, நத்தைகளைப் போல சிறிய வகை சோழிகள் உணவுக்காக அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. எனினும் பெரிய வகை சோழியான புலிச்சோழியை (Tiger Cowrie) இந்திய பசிபிக் கடலோரப் பகுதி மக்கள் சுவை மிகுந்த உணவாகக் கருகின்றனர். *ஒரு சோழிக்கு 2 அல்லது 3 பேரீச்சைப் பழங்களோ, 4 அல்லது 5 சோழிகளுக்கு ஒரு முள்ளங்கியோ அக்காலத்தில் பண்டமாற்றுப் பொருளாக விளங்கின.
ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட சோழி இனங்கள் இருப்பினும் தங்க நிறச் சோழியான
(Golden Cowrie) சிப்ரெயா ஆரென்ஷியம் மிகவும் மதிப்பு மிக்க சோழியாகக் கருதப்படுகின்றது. |