ஊமத்தை

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Datura metal L.

குடும்பம் : Solanaceae

ஆங்கிலம் : Thorn apple

வளரிடம் : இந்தியா முழுவதும் தரிசு நிலங்கள், சாலை ஓரங்களில் காணப்படுகின்றன.

வளரியல்பு : கெட்டியான குறுஞ்செடிகள், ஒரு மீ உயரம் வளரக்கூடியவை. மிக நுண்ணியத்தூவிகள் கொண்டவை. இலைகள் பெரியவை. மலர்கள் பெரியவை; செங்குத்தாகக் காணப்படும வெண்மை, பர்புள் வண்ணங்களுடனும், புணல் வடிவ அல்லி குழலுடனும் இருக்கும். கனிகள் வெடிகனி வகையினது, கோள வடிவில் அல்லது முட்டை வடிவில் காணப்படும். முட்களால் மூடியது 4 பிரிவுகளாக உடைபடும். விதைகள் அழுத்தப்பட்டவை, கருஞ்சிவப்பு வண்ணம் கொண்டவை.

மருத்துவப் பயன்கள் : இலைகள் வலி போக்குவன, கிரிமிகளுக்கு எதிரானவை; போதை தருவது; விதைகள் மற்றும் வேர் வயிற்றுப்போக்கு தடுப்பது; காய்ச்சல் போக்கும்; தோல் வியாதியைப் போக்கும்; இந்திய மருத்துவத்தில் இது அபினுக்கு (opium) மாற்றாகப் பயன்படுகிறது. இலைச்சாறு கோனேரியாவுக்குத் தயிருடன் கலந்து தரப்படுகிறது. வெறிநாய்கடி நோயான ஹைடிரோல் பொபியாவுக்கும் மருந்தாகிறது.