கண்டங்கத்திரி தாவரவியல் பெயர் : Solanum xanthocarpum Schrader & Wendl. குடும்பம் : Solanaceae வளரிடம் : சமவெளிகள், கடற்கரையோரங்கள், இமயமலை, தெற்கு ஆசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, தரிசு நிலங்கள், பால் நிலங்கள் போன்ற இடங்களில் தனிச்சையாக வளர்கின்றன. வளரியல்பு : முட்களுடைய, தரையொட்டில் பரவும் துணைக் குறுஞ்செடி. இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை. நீலநிற மலர்கள், சிறு கத்தரிக்காய் வடிவிலான காய்களையும், மஞ்சள் நிற பழங்களையும் உடைய முள் நிறைந்த படர் செடி. மருத்துவப் பயன்கள:
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல்வாயு
அகற்றியாகவும் சீதளக் காய்ச்சல், சளிக்காய்ச்சல், நுரையீரல் தொடர்பான நோய்கள்,
புளு (Flue) சுரம், நிமோனியா சுரம், மண்டை நீர் ஏற்றக் காய்ச்சல், ஆஸ்துமா,
ஈளை, கப இருமல், பீனிசம் ஆகிய நோய்களுக்குச் சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது.
பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைபிடிக்க பல்வலி, பல் அரணை தீரும். |