கம்பு

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Pennisetum lyphoides (Burm.f) Stapf & C.E.Hubb

குடும்பம் : Gramineae

ஆங்கிலம் : Pear millet

வளரிடம் : சமவெளிகள், கடலோரப் பகுதிகள் மற்றும் மலைகளில் பயிராகும் தானிய வகைப் பயிர். தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.

வளரியல்பு :தண்டுகள் உயரமானவை, நிமிர்ந்தவை, இலைகள் நீண்டு மெலிந்தவை, தட்டையானவை. பேனிகிள் மஞ்சரி கதிர் போன்றது. சிறுகதிர்கள் ஒரு தகாத்தில் 2-5 அடியில் வட்ட அடுக்கு முள்ரோமங்களால் தாங்கப்படுகின்றன. மேல் லெம்மா இருபாலான மகரந்த்த்தாள்கள் 3, சில சமயங்களில் நுனியில் உரோமம் பரவியது. தானியம் நீண்டு உருண்டது, பின்புறம் அமுங்கியது, கோள வடிவானது.

மருத்துவப் பயன்கள: இதன் அரிசி இடித்து கஞ்சியாகக் கொடுக்கும்பொழுது சிறுநீரை நன்கு பிரிக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகப் பயன்படுகிறது. இவ்வரிசியிலிருந்து பலவிதமான உணவுப் பண்டங்கள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றன.