மந்தாரை

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Bauhinia purpurea L.

குடும்பம் : Caesalpiniaceae

ஆங்கிலம் : Butterfly plant

வளரிடம் : இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும், தரிசு மற்றும் மித வெப்பமான பகுதிகளில் காணப்படும்.

வளரியல்பு : சிவப்பு மலர்கள் இலைகளோடு முனையில் காணப்படும். ஃபாளிக்கிள் மஞ்சரியில் அமைந்திருக்கும். புல்லிகள் ஒழுங்கற்ற முறையில் 3-5 பிளவுகள் கொண்டவை. வளமான மகரந்தத்தாள்கள் 3 அல்லது 4 வெடி கனி, குறுகி, தட்டையாக்கப்பட்டு திடமானவை. விதைகள் 12-15. வறண்ட பகுதிகளில் காணப்படும்.

மருத்துவப் பயன்கள் : மலர்கள் மிதமான பேதிமருந்து, உலர்ந்த மொட்டுகள் பூச்சிகளை நீக்கும். சீதபேதி மற்றும் மூலவியாதியைக் குணப்படுத்தும். பட்டை வயிற்றுப் போக்கினை நீக்கும். வேர்ப்பட்டை தயிர் உடன் கலந்து இரத்தக்கட்டிகளைக் குணப்படுத்த உதவும், அரைத்த வேர்ப்பட்டை சுக்குடன் கலந்து குரல்வளைச் சுரப்பி வீக்கத்துக்குத் தடவப்படுகிறது. வேர் அஜீரணத்தைப் போக்கும்.