வெங்காயம்

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Allium cepa L.

குடும்பம் : Liliacecde

ஆங்கிலம் : Onion

வளரிடம் : நிலவுலகின் வடக்கு அரைக்கோளப் பகுதியினைச் சார்ந்தது, பல்லாயிரம் ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடுகளில் பயிரிடப்படுகிறது. உலகமுழுவதும் காய்கறியாக வளர்க்கப்படுகிறது.

வளரியல்பு : ஒரு மீ உயரம் வளரக்கூடிய தரையடித்தண்டுடைய குறுஞ்செடியாகும், பல பருவச் செடி, உண்மையான தண்டு செதில் இலைகள் மூடப்பட்டு குமிழ் தண்டாகக் காணப்படுகிறது. இத்தண்டிலிருந்து பசுமை இலைகள் வெளியே வருகின்றன. இலைகள் உருளை வடிவின; மணம் வீசுபவை; மலர்கள் நீண்ட மஞ்சரி தண்டின் நுனியில் குடை போன்ற அம்பல் மஞ்சரியாக அமைந்தவை. குமிழ் தண்டு மூலம் பயிரிடப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் : சிறுநீர்ப்போக்குவி; கிருமிகளுக்கு எதிரானது; வீக்கம் போக்க வல்லது; வலி நீக்கும்; இருமல் தீர்க்கும்,மூட்டுவலிக்கு எதிரானது ; இரத்த ஓட்டத்திற்கு சிறந்தது மற்றும் மாரடைப்புக்கு நல்லது. சூடு செய்யப்பட்டசாறு காதுவலிகளுக்குக் காதுக்குள்ளே விடப்படுகிறது. புண்களிலிருந்து சீழ் வடிய, வதக்கிய வெங்காயம் பற்றாகக்கட்டப்படும், பால் உணர்வைத்தூண்டும், வெங்காயம் பச்சையாக சாப்பிடும் பொழுது மாதவிடாய் தூண்டும் வினிகருடன் சேர்த்து சமைத்து காமாலை, கணையப்பெருக்கம், அஜீரணம் போக்கப் பயன்படுகிறது.