பாலக்கீரை

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Spinacia oleracea L.

குடும்பம் : Chenopodiaceae

ஆங்கிலம் : Spinach

வளரிடம் : தெற்கு, மேற்கு ஆசியாவினைச் சார்ந்தது. இந்தியாவில் உணவுக்காகப் பயிரிடப்படுகிறது.

வளரியல்பு : செங்குத்தாக வளரும் ஒரு பருவ குறுஞ்செடி. இலைகள் மாற்று இலை அடுக்கில் அமைந்தவை. மிருதுவானவை, சதைப்பற்றானவை. பலவாறாக பிளவுற்றது. முட்டை வடிவிலான மலர்கள் ஒரு பாலின, பச்சை வண்ணம், ஆண் மலர்கள் கொத்தாக இலைக் கோணத்திலும் அமைந்தவை. கனிகள் கெட்டியானவை, அமுங்கியவை, முட்கொண்ட மூடியினால் மூடப்பட்டவை. விதைகள் நேரானவை, வித்திலைகள் வெண்மையானவை.

மருத்துவப் பயன்கள் : முழுத்தாவரமும், விதைகளும் பயனுள்ளவை. இலைகள் வைட்டமின்கள், கரோட்டின். அமினோ அமிலங்கள் கொண்டவை. இவை சிறுநீர்க் கற்களைப்போக்கவும், நுரையீரல் வீக்கம், பாக்டீரியா நோய்கள் தீர்க்கவும் பயன்படுகிறது. விதைகள் மளமிளக்கி, குளிர்ச்சி தருபவை. மூச்சு விடுதலில் ஏற்படும் தொல்லை தீர்க்கும். கல்லீரல் வீக்கம் மற்றும் மஞ்சள் காமாலை நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.