பொன்னாங்கண்ணி கீரை

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Alternanthera sessilis DC.

குடும்பம் : Amaranthaceae

வளரிடம் : இந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது. தென் அந்தமான் மற்றும் இமாலாயத்தின் 1200 மீ உயரம் வரை வளர்ந்து காணப்படும்.

வளரியல்பு : இத்தாவரம் ஒரு பருவ அல்லது பல பருவ குறுஞ்செடியாகும். பல கிளைகளுடன் படர்ந்து கணுக்களில் வேருடன் காணப்படும். இலை எதிர் இலையடுக்கம், நீளமானவை, ஈட்டி வடிவம், குட்டையான காம்பு, மலர்கள் இருபாலின; சிறியவை, பூவிதழ் நுனி நீட்சியுடையது. கனிகள் அமுங்கியவை, தலைகீழ்ச் சிறுநீரக வடிவானது. விதைகள் நுண்ணியவை, லென்சு வடிவம். கருஞ்சிவப்பு வண்ணம் மிகவும் லேசானது.

மருத்துவப் பயன்கள் : இத்தாவரம் காய்சலைப் போக்கவும், பால் சுரப்பினை அதிகரிக்கவும் சிபாரிசு செய்யப்படுகிறது. தண்டு மற்றும் இலை பாம்புக்கடியில் பயன் உண்டு என கருதப்படுகிறது. இளம் தண்டுகள் இலைகளுடன் ஊட்டம் நிறைந்தது. உடல் வண்ணத்தை ஒளிரச்செய்யும். கண்பொளிவை நன்கு தூண்டும்.