சடாமாஞ்சி / இலாமிச்சை தாவரவியல் பெயர் : Nardostachys gradiflora C.D. குடும்பம் : Valerianaceae ஆங்கிலம் : Indian nard வளரிடம் : உயரமான இடங்களில் காணப்படுகிறது. இது இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது. வளரியல்பு : செங்குத்தாக வளரும் பல பருவத் தாவர குறுஞ்செடி, உதிர்ந்த இலைகளின் நார்பகுதி தரைமேலான வேர்பகுதியினை (root stock ) மூடி கட்டையாகக் காணப்படும். இவைகள் தரை ஒட்டியவை; வேர் இலைகள் (Radicle leaves ) எனப்படும். தேக்கரண்டி வடிவிலானது. இலைகள் நீள் வட்டம் மலர்கள் நுனியில் தொப்பி போன்று அமைந்தவை; புல்லி வட்டம் கனியில் தொடருவது; பெரிதாக வளர்ந்தது; அல்லி இதழ்கள் ரோஸ் வண்ணமானது. கனி தலைகீழ் முட்டை வடிவிலானது விதை அமுங்கியவை. மருத்துவப் பயன்கள் : பழங்காலந்தொட்டே இந்திய மருத்துவத்தில் சடாமாஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தரையடித் தண்டும், வேரும் முக்கிய பயன்கொண்டவை, கிருமி நாசினி, நறுமணங்கொண்டது; கசப்பானது, சிறுநீரைத் தூண்டுவது, மாத விடாய் ஊக்குவிக்கும். மலமிளக்கி, வயிற்று நோய் நீக்கும்; இச்சாறு கை, கால் வலிப்பு, மனநோய், இதயத் துடிப்பு, ஆகியவற்றிற்குச் சிறந்த மருந்தாகும். |