சீமை அகத்தி தாவரவியல் பெயர் : Cassia alata L. குடும்பம் : Caesalpiniaceae ஆங்கிலம் : Ring worm senna வளரிடம் : தோட்டங்களில் வளர்க்கப்படும். இயல்பாகக் காடுகளில் நன்கு வளரும். வளரியல்பு : மெல்லிய உரோமங்கள் உடைய புதர் செடி, சிறு காம்புகளை உடைய தனியிலைகள் கொண்டது. மியுக்ரோனேட் அல்லது அப்டியூஸ் நுனி கொண்டு கெட்டியான நயத்தோடு மழமழப்பான மேற்புறத்தையும், அடியில் சிறு உரோமங்களையும் கொண்டது. ரெசீம்கள் 1.3 - 25 செ.மீ நீளமுடைய காம்புகளையுடையவை. மலர்கள் பெரியவை; மஞ்சள் நிறம், சமமற்ற மகரந்தத் தாள்கள் கனிகள் நீண்டு, மெல்லிய படலம் போன்றது, வெடித்துச் சிதறக்கூடியவை. மருத்துவப் பயன்கள் : மலர்களின் சாறு மார்புசளிக்கு மருந்தாகிறது. இலை கசாயம் எலும்மிச்சைச் சாற்றுடன் கலந்து தோல் வியாதிகளுக்குப் பயன்படுகிறது. |