|
சித்தரகம் தாவரவியல் பெயர் : Plumbago zeylanica குடும்பம் : Plumbaginaceae ஆங்கிலம் : White Leadwort வளரிடம் : தென்னிந்தியாவினைச் சேர்ந்த சித்தரகம் மலேசியா, தென்கிழக்கு ஆசியா, ஆகியப் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் பீகார், மேற்கு வங்காளம், தென்னிந்திய மாநிலங்களில் வளர்க்கப்படுகிறது. வளரியல்பு : தொற்றிப் படரும் புதர் வகை பல பருவத் தாவரம்; 5 மீ உயரம் வரை வளரக்கூடியது. இலைகள் முட்டை வடிவம்; மஞ்சரி காம்பு தூவிகளால் அல்லது சுரப்பிகளால் மூடியது. கனிகள் நீள் வடிவம் கூர்நுனி கொண்டவை; புல்லி இதழ் கனிகளில் பசையுடைய மூடியாகத் தொடர்கிறது. மருத்துவப் பயன்கள்
: சித்தரகத்தின் வேர், வேர்ப்பட்டை மற்றும் இலைகள் மருத்துவப்
பயன் கொண்டவை, வேர் கசப்பானது, வியர்வைத் தூண்டியாகச் செயல்படுகிறது, சொறி,
படை, ஆகியவற்றின் மீது களிம்பாகப் பூசப்படுகிறது. இலை மற்றும் வேர் வயிற்றுப்
போக்கு போன்ற ஜீரண கோளாறுகளுக்கு மருந்தாகும். உடல் எடைகுறைப்பதற்கு உதவும் |