கிரந்தி நாயகம்

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Dipteracanthus patulus (Jacq.) Nees.

குடும்பம் : Acanthaceae

வளரிடம் : இலங்கை, இந்தியா மேற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா, சமவெளிப் பகுதிகள் மற்றும் தமிழகமெங்கும் தரிசுகளிலும் புதர்காடுகளிலும் காணப்படுகிறது.

வளரியல்பு : நிமிர்ந்த சிறு செடி. இலைகள் நீள் வட்டம் – முட்டை வடிவானவை. மலர்கள் சைம்கள், புல்லி மடல்கள் வெளிப்புறத்தில் உரோமங்கள் உள்ளவை. அல்லிகள் நீலம் செங்கருநீலம். கேப்சியூல் நீள்வட்டமானது, விதைகள் குறுக்களவு 3 மி.மீ.

மருத்துவப் பயன்கள: இலைகளே மருத்துவப் பயனுடையவை. நுண்ணுயிரி கொல்லியாகச் செயல்படும். இலையை அரைத்து நகச்சுற்று, சிரங்கு ஆகியவற்றுக்குப் பூச குணமாகும். ஐந்தாறு இலைகள் மென்று தின்னத் தேள், பாம்பு ஆகியவற்றின் நஞ்சு நீங்கும். கடிவாயில் இலையை அரைத்துப் பூசலாம்.