தக்காளி்

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Lycopersicon lycopersion (L.) Karsten.

குடும்பம் :Solanaceae

ஆங்கிலம் :Tomato

வளரிடம் : அமெரிக்கா மற்றும் மெக்சிகோ அதிகமான அளவில் பயிராகுபவை, மலைகளில் அதிகமாகவும் மற்றும் சமவெளிப் பகுதி, காவேரி ஆறு ஓரங்களில் துணைப் பயிராகவும் வளர்க்கப்படுகின்றன.

வளரியல்பு :ஒட்டும் நுண் – உரோமங்கள் கொண்ட சிறு செடி, இலை விளம்பிலிருந்து மை நரம்பு வரை பிரிந்தவை, மலர்கள் ஒன்று, இலைக்கோணத்தில் உள்ளன, காம்புடையவை, புல்லி மடல்கள் ஐந்து, நுனி படிந்த உரோமங்கள் உண்டு, இணைந்தவை, அல்லிகள் மஞ்சள், மகரந்ததாள் ஐந்து, சூல் தண்டைச் சுற்றிக் குவிந்தும் வெளிநோக்கியுமிருக்கும். கனி முழுச் சதை கனி அழுந்தப்பட்ட கோள வடிவானது. விதைகள் வட்டத்தட்டு வடிவானவை.

மருத்துவப் பயன்கள: குளிர்ச்சியைத் தரும் மிகச் சிறந்த பானமாகும். தென் இந்தியா சமையல்களில் உணவுக்கு அதிகமாகச் செயல்படுகிறது. முகத்தைப் பளபளக்கச் செய்கிறது.