துளசி தாவரவியல் பெயர் : Ocimum sanctum L. குடும்பம் : Lamiaceae ஆங்கிலம் : Sacred Basil வளரிடம் : இந்தியா முழுவதும் இயல்பாகவும் பயிரிடப்பட்டும் வளர்கின்றது. வளரியல்பு : நன்கு கிளைத்த மிகவும் மணமிக்க, சில வேளைகளில் கட்டைத்தன்மை வாய்ந்த, மேல் நோக்கிய கிளைகளையுடைய சிறிய உரோமங்கள் உடைய சிறு செடி. இலைகள் நீள் உருளை வடிவம் கொண்டு மழுங்கிய அல்லது உள் முனைகள் கொண்டு சிறு பற்களையுடையவை. கோண அல்லது நுனி ரெசிம்களில் சிறிய மலர்கள் அமைந்துள்ளன. கனிகள்உருளை வடிவம் கொண்டவை, சிறு கனிகள் கொட்டை கூராக உள்ளன. மலர்களும், கனிகளும் வருடமுழுவதும் உருவாக்கப்படும். மருத்துவப் பயன்கள்
: முழுத்தாவரம் கிருமி நாசினி, நோயை ஆற்றும், கபத்தை வெளியேற்றும்,
பூச்சி மற்றும் கொசுக்களைக் கொல்லும், கசாயம் மார்பு சளியைக் குணப்படுத்தும்,
மூச்சடைப்பு மற்றும் வயிற்றுப் போக்கினைக் குணப்படுத்தும். விதைகள் நோயைப்
போக்கும். சிறுநீரக மற்றும் பாலுறுப்பு முறைகேடுகளைக் குணப்படுத்தும். இலைகள்
கபத்தை வெளியேற்றும். சீதபேதி மற்றும் வயிற்று மந்தத்தைக் குணப்படுத்தும்.
விடாத காய்ச்சல் மற்றும் இரத்தப் போக்கினைத் தடுக்கும். வாந்தியைத் தடுத்து,
குடல் புழுக்களை அழிக்கும். ஜலதோசம், மார்புச்சளி, மூக்கடைப்பு மற்றும் காது
வலிக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. சாறு ஈரல் பாதிப்புகள் மற்றும் குழந்தைகளின்
உபாதைகளுக்குத் தீர்வாக உள்ளது. |