நல்ல வேனை

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Cleome gyanandra L.

குடும்பம் :Capparaceae

வளரிடம் : கிராமங்களில் உள்ள பாழ் நிலங்களில், குப்பைக் கொட்டும் இடங்களில், சாலையோரங்களில் பயிர் நிலக்களைகளாக வளர்கின்றன.

வளரியல்பு : ஒட்டும் உரோமங்கள் கொண்ட நாற்றமுடைய ஓராண்டு உயிர் வாழ் சிறு செடி 80 செ.மீ இலைகள் பிரிந்து சிற்றிலைகளானவை. தலைகீழ் முட்டை வடிவம். அல்லி இதழ்கள் 4. இளஞ்சிவப்பு, மரந்தாள்கள் 6. கேப்சியூல் உருட்டானது. வரிப்பள்ளங்கள், சுரப்பிகள் கொண்டது. அதிகப்படியான விதைகள் கொண்டவை.

மருத்துவப் பயன்கள் : இலை நீர்க்கோவை நீக்கும், பூ கோழையகற்றும், பசியுண்டாக்கும், விதை வயிற்றுப்புழு கொல்லியாகவும் வாயுவகற்றியாகவும் பயன்படும். இலைச்சாறு ஒரு துளி காதில் விட சீல் அல்லது சீழ் வருவது நிற்கும். அது போன்று கட்டிகள் மீது பூச கட்டிகள் உடையும். விதைப் பொடி ஒரு சிட்டிகை வெந்நீரில் கொடுத்து வர இருமல் தீரும்.