சிலந்தி நாயகம் / வெடிச்செடி

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Dipteracanthus prostratus (Poiert) Nees.

குடும்பம் : Acanthaceae

வளரிடம் : சமவெளிகள், கடற்கரையோரங்கள், பண்படுத்தப்பட்ட காட்டின் எல்லைகள், பயிர் நிலங்கள் மற்றும் தமிழகமெங்கும் வளர்கின்றது. வெடிக்காய்ச் செடி எனவும் அழைக்கப்பெறும்.

வளரியல்பு : நிலம் படிந்த சிறு செடி. இலைகள் முட்டை–நீள் வட்டம் மலர்கள் 1. பூக்காம்புச் செதில்கள் நீள் வட்ட வடிவானவை. அல்லிகள் நீலம், செங்கருநீலம் / வெண்மை. சூல்பை மென் உரோமங்களானவை. கேப்சியூல் விதைகள்.

மருத்துவப் பயன்கள: செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது. குறிப்பாக, பூ, பிஞ்சு, இலை, இலையை நீரின்றியரைத்து நகச்சுற்றில் கட்டிவர உடைந்து, இரத்தம், கீழ் முளை யாவும் வெளியேறிவிடும். இலைச்சாறுடன் சம அளவு பால் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர கட்டிகள் வராது தடுக்கும். இரத்தச் சர்க்கரை குறையும். மூலச்சாறு 60 மி.லி கொடுத்து இலையைரைத்து கடிவாயில் கட்டிக் கடும் பத்தியத்தில் இருக்க அனைத்துப் பாம்பு நஞ்சுகளும் தீரும்.