வன்னி மரம்
வன்னி மரம் இந்தியா, அரேபியா, ஈரான், ஆப்கானிஸ்தான்,
பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் ராஜஸ்தான், அரியானா,
பஞ்சாப், குஜராத், உத்திரப் பிரதேசம் மற்றும் தென்னகத்தின் வறண்ட பகுதிகளிலும்
இந்த மரம் வளர்கின்றது. ஆண்டுக்கு 500 மில்லி மீட்டருக்கும் குறைவாக மழையுள்ள
இடங்களிலும் இது வளரும் தன்மையது. வறண்ட, பாலைவனப் பகுதிகளில் வளரக்கூடிய
பசுமைமாறா மரம் வன்னியாகும்.வன்னி மரத்தின் தாவரவியல் பெயர் ப்ரஸாபிஸ் ஸ்பைசிஜரா
(Prosopis spicigera (L) ) ஆகும். இதனுடைய தாவரக் குடும்பம் மைமோசேசியே. பயன்கள் : வன்னி மரத்தின் காய்கள் பெண்களின் அதிகமான மாதவிலக்கு இரத்தப்போக்கை தடுக்க மருந்தாகப் பயன்படுகிறது. இலைகளை அரைத்து வலியுள்ள இடத்தில் பற்றாகப் போடலாம். குதிரைகளின் காயத்தைப் போக்க இலைகளை அரைத்து களிம்பாகப் பூசி கட்டு கட்டலாம். இலைகள் கால்நடைகளுக்குச் சிறந்த தீவனமாகும். நோக்கீட்டு நூல் : மரம் மனிதனின் நண்பன் வ.சுந்தரராஜ் (2004) திருச்சி |