விளாமரம்

முனைவர் கு.க.கவிதா,
உதவிப் பேராசிரியர்,
சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

தாவரவியல் பெயர் : ஃபெரோனியா எலிஃபேன்டம்(Feronia elephantum L.)
குடும்பம் : ரூட்டேசியே (Rutaceae)

விளாமரத்துக்கும் விளா பழத்துக்கும் தனிச்சிறப்புகள் உள்ளன. திருக்காறாயில் என்னும் திருக்கோவிலின் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

வளரியல்பு :

இதன் கிளை மற்றும் வேர்கள் தடிப்பாகவும் உறுதியாகவும் இருக்கும். பட்டைகள் கெட்டியாகவும் சொரசொரப்பாகவும் இருக்கும். பழம் புளிப்புக் கலந்த இனிப்பாக இருக்கும்.

பயன்கள் :
விளா மரம்

ஒவ்வாமை நோய், இரத்த போக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

மார்பகம், கர்ப்பப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பழம் வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. தின்பண்டமாகவும், பித்த நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

பித்த கொதிப்பைத் தணிக்க இதன் இலை பயன்படுகிறது.

பட்டையால் குழந்தை பிரசவித்த பெண்களின் வயிற்று உள்ளுறுப்புகளுக்குச் சக்தி கிடைக்கும்.

கொழுந்திலையை நீரில் இட்டு குடிக்க வாயுத் தொல்லை நீங்கும்.