முதலாம் சமுத்ர குப்தர் காசுகள்

முனைவர் மா.பவானி
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை


காலம் :(பொ.ஆ 350 - 380)

முதலாம் சமுத்திரகுப்தர் தமது தந்தை முதலாம் சந்திரகுப்தர் மற்றும் தாய் குமாரதேவியின் நினைவாக இக்காசுகளை வெளியிட்டுள்ளார் என்பது அறிஞர்கள் கருத்து. மற்ற அரசர்களைப் போலன்றி முதலாம் சந்திரகுப்தர் எண்ணற்ற வகைகளில் காசுகளை வெளியிட்டுள்ளார். அரசர் ஈட்டியையோ அல்லது கொடியையோ பிடித்திருப்பது போன்று, வலக்கையை இடுப்பில் வைத்துக்கொண்டுள்ளார், வலப்புறம் குள்ளன் ஒருவன் நிற்பதுபோன்று, மஞ்சத்தில் அமர்ந்து வீணை வாசிப்பது போல,இந்திய பாணியில் உடை அணிந்து, கால்மேல் கால் வைத்து புலியைக் கொல்வது போல், அசுவமேத யாகக் காசு, யாகக் கம்பத்தின் முன் பலிக்கான குதிரை,
பின்புறம் அரசி தன் கையில் வெண்சாமரம் வைத்துள்ளது போல காசுகளை வெளியிட்டுள்ளார். இவரது காசுகள் பெரும்பாலும் தங்கத்தால் ஆனவையாகும்.

உலோகம்: தங்கம்

எழுத்து்:மொழி்

மொழி்:சமஸ்கிருதம்