இன மரபியல்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

இன மரபியல் என்பது சமகால மக்களையும் பழங்குடி மக்களையும் அவர்களின் பழக்கவழக்கங்கள், தொழில்நுட்பம் மற்றும் பிறகூறுகளை ஆராயும் இயலாகும். இது மாந்தவியலின் (மானுடவியல்) ஒரு உட்பிரிவாகத் துவங்கியது. தற்பொது இது பல மாற்றங்களைப் பெற்றுள்ளது. இது சமுக அறிவியலின் ஓர் ஆய்வு முறையாகும். இது வரலாற்றாய்வுக்கும் மிகவும் உதவுகின்றது.
இறந்தவர் வழிபாடு


குறிப்பாக, காலனி ஆதிக்கதின் விளைவாக இவ்வியல் வளர்ந்தது. இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில் பல "பழங்குடி" மக்களின் வாழ்க்கை முறைகள் பதிவு செய்யப்பட்டன. இந்தக் குறிப்புகள் தற்போது வரலாற்று, மற்றும் தொல்லியல் ஆய்வுக்கு குறிப்பாக பழங்கால மக்களின் வாழ்க்கை முறையை அறியவும் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன.
குயவர் பானை செய்யும் காட்சி


சமகால மக்களின் மரபு வழி அறிவு மற்றும் தொழில் நுட்பம், அதாவது பானை செய்தல், கப்பல், படகு கட்டுதல், இறப்பு-பிறப்புச் சடங்குகள் ஆகியவையும் இவ்வியலில் ஆராயப்படுகின்றன.

மரபு வழியாக மனிதர்கள் பயன்படுத்திய தொழில் நுட்பங்கள், அவர்களின் பண்பாட்டு வழக்கங்கள் பல காலப்போக்கில் அழிந்து வருகின்றன. மரபு வழிக் கப்பல் கட்டுதல், மருத்துவம் மற்றும் இது போன்ற தொழில் நுட்பங்களைப் பதிவு செய்தல் அவசியமாகும். அழிந்துவரும் பண்பாட்டு வழக்கங்கள் மற்றும் தொழில் நுட்பங்களைப் பதிவு செய்ய இவ்வியல் உதவுகின்றது.
பளியர்கள் தேன் சேகரிக்கப்பயன்படுத்தும்
கொடியாலான ஏணியின் பகுதிகளுடன்


இனவியல் ஆய்வுகள் செய்யும்போது அந்த மக்களின் அனுமதியைப் பெறுவது அவசியமாகும். சமகாலச் சமுகத்தின் சிக்கலைத் தீர்க்கவும் இவ்வகை ஆய்வுகள் உதவுகின்றன.