கோனேரிராயன் காசுகள்

முனைவர் மா.பவானி
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

கோனேரிராயன் (பொ.ஆ. 15 ஆம் நூற்றாண்டு):
 
புள்ளியிட்ட வட்டத்திற்குள்
காளை
 
கொனெரிராயன் எழுத்துக்களுக்கிடையே
குத்துவான்

15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஜயநகர ஆட்சியின் கீழ் சிற்றரசனாக இருந்தவன் கோனேரிராயன். இவனது ஆட்சிப் பகுதி வடக்கே காஞ்சிபுரத்திலிருந்து தெற்கே திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் உட்பட்ட பகுதிகள் அடங்கியிருந்தன. பொ.ஆ. 1471இல் கோனேரிராயன் திருச்சிராப்பள்ளி பிராந்திய தலைவரானார். இவரது தலைநகர் காஞ்சிபுரமாகும். கோனேரிராயனின் செப்பு நாணயங்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன.