குடியம்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

இந்தியாவின் மிகச் சிறப்பான பழங்கற்கால வாழ்விடமாகும். இது ஒரு குகையுடன் கூடிய இடமாகும். இந்தக் குகையில் பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கானத் தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன. இது போன்ற பழங்கற்காலக் குகைகள், இந்தியாவில் வெகு அரிதாகவே உள்ளன.

அமைவிடம்

இது சென்னைக்கு வட மேற்கே 60 கி.மீ. தொலைவில் உள்ளது. இது பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவ்விடம் இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங் ஆகியோர்களால் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அகழாய்வுகள்

இந்தக் குகை 1962-63, 1963-64 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசுத் தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்டது. இங்கு பழங்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன.

சிறப்பு

பழங்கற்கால மனிதர்கள் இயற்கைச் சீற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இயற்கையாக அமைந்துள்ள குகைகளைப் பயன்படுத்தினர் என்பதற்கு இந்த இடம் ஒரு சிறப்பான சான்றாகும். இங்கு பழங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கிடைக்கின்றன. அச்சூலியன் காலத்திற்குப் பிந்தைய (இடைப் பழங்கற்காலம்) காலக் கருவிகள் நுண்கருவி தொழிற்கூடமாக மாறுவதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இப்பகுதியில் 16 பாறை மறைவிடங்கள் உள்ளன. அவற்றில் இரண்டில் கற்காலச் சான்றுகள் காணப்படுகின்றன.

மேற்கோள் நூல்

Indian Archaeology - A Review, 1962-63