குன்னாண்டார் கோயில்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

குகைக் கோயிலால் சிறப்புப் பெற்ற ஊர் குன்னாண்டார் கோயிலாகும்.

அமைவிடம்

இது புதுக்கோட்டைக்கு 25 கி.மீ வடக்கே உள்ளது.

சிறப்பு

திருக்குன்றக்குடி என்றழைக்கப்படும் இவ்வூரில் இரண்டாம் நந்திவர்ம பல்லவ மன்னர் காலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. இது கருவறையையும் ஒரு சிறிய மண்டபத்தையும் கொண்டுள்ளது. இக்குடைவரை முத்தரையர் படைப்பாகக் கருதப்படுகின்றது.

கருவறையின் வெளிப்பக்கச் சுவரில் வலம்புரி விநாயகரும், சிவன்-பார்வதி சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன.

இக்குகைக் கோயிலின் முன்புள்ள போத்தரையன் மண்டபம், நாட்டிய மண்டபம் போன்றவை முத்தரையர்கள் காலத்திலும், நூற்றுக் கால் மண்டபம் விஜயநகர காலத்திலும் கட்டப்பட்டவையாகும்.

இங்கே பல்லவர், பிற்காலப் பாண்டியர், சாளுக்கிய சோழர் மற்றும் விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் பல உள்ளன.

மேற்கோள் நூல்

ஜெ.இராஜாமுகமது, 2004. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு சென்னை, அரசு அருங்காட்சியகம்.