குடைக்கல்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னம். குடைக்கல் பெருங்கற்காலத்தில் இறந்தவர்களுக்காக, இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட ஈமச்சின்னமாகும். இது பார்ப்பதற்கு காளானுடைய அமைப்பை ஒத்திருக்கும்.

இது செம்புராங்கல்லால் (லேட்டரைட்) செய்யப்பட்டதாகும். இதன் அடிப்பகுதியில் மூன்று அல்லது நான்கு செங்குத்தான கற்கள் வைக்கப்பட்டு, ஓர் அறை போன்ற அமைப்பு உருவாக்கப்படுகின்றது அதன் மீது ஒரு குடையின் மேற்பகுதி போன்ற வடிவமுடைய ஒரு கல் வைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு ஒரு குடைபோல இருப்பதால் குடைக்கல் என்று கூறப்படுகின்றது. இதைக் கற்திட்டையின் ஒருவகை எனக் கருதலாம்.

காணப்படும் இடம்
குடைக்கல், சேரமாங்காடு, கேரளா

இவ்வகைச் சின்னங்கள் கேரளாவில் சேரமான்காடு, ஆனைக்கரை மற்றும் பல இடங்களில் காணப்படுகின்றன.

காலம்

இவ்வகை நினைவுச் சின்னங்கள் பொ.ஆ.மு.1000லிருந்து பொ.ஆ 500 வரையான கால கட்டத்தைச் சேர்ந்தவை.

சிறப்பு

இந்த வகை நினைவுச் சின்னங்கள் சமூகத்தில் சிலருக்கு மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. ஏனெனில் சில தொல்லியல் இடங்களில் இவை ஒரு சில எண்ணிக்கையில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால், பிற வகைச் சின்னங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன.

மேற்கோள் நூல்

Leshni,L.S 1974, South Indian Megalithic Burials, The Pandukal Complex. Wesbaden.