முள்ளிக்காடு

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்

இது ஒரு தொல் பழங்கால,வரலாற்றுத் துவக்கக்கால வாழ்விடமாகும்.

அமைவிடம்

முள்ளிக்காடு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் வட்டத்தில், வெங்கடசமுத்திரத்தில் இருந்து 6 கி.மீ, தொலைவில் உள்ளது. இவ்வூரில் வன்னியாறு ஓடுகின்றது. இது மலைகள் அமைந்த ஓர் ஊராகும்.

தொல்லியல் சான்றுகள்

இங்கு புதிய கற்காலத்தைச் சேர்ந்த மெருகேற்றப்பட்ட கற்கோடரிகள் காணப்படுகின்றன. இங்கு இந்திய நடுவண் அரசுத் தொல்லியல் துறையைச் சார்ந்த பி.நரசிம்மையா அகழாய்வு செய்துள்ளார். இங்கு புதிய கற்காலத்தைச் சேர்ந்த மண்பானை ஓடுகளுடன் கற்கருவிகளும் கிடைத்தன.

புதிய கற்காலத்திற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த நுண்கற்கருவிகள் (இடைக் கற்காலத்தைச் சேர்ந்தவை) கிடைக்கின்றன.

புதிய கற்காலத்திற்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்த பெருங்கற்கால/இரும்புக்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இங்கு கருப்பு-சிவப்பு மட்கல ஓடுகளும் காணப்படுகின்றன.

மேற்கோள் நூல்

தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி). 2005 தருமபுரி மாவட்டத் தொல்லியல் கையேடு. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.