செங்களூர்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

செங்களூர் ஒரு பெருங்கற்கால, இரும்புக்கால இடமாகும். இங்கு பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் பல காணப்படுகின்றன.

அமைவிடம்

செங்களூர் திருச்சிக்குத் தென்கிழக்கே சுமார் 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் உள்ளது.

அகழாய்வுகள்

செங்களூர் இந்திய அரசுத் தொல்லியல் துறையின் கோயில் அளவீட்டு நிறுவனத்தின் சார்பாகத் தயாளன் அவர்கள் தலைமையில் அகழாய்வு செய்யப்பட்டது. இங்கு கற்பதுக்கைகளும், சதுரமான கல்லாலான அமைப்பும், கல்வட்டங்களும் காணப்பட்டன. இங்கு கருப்பு சிவப்பு, கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்கல வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு சுமார் 300 ஈமச் சின்னங்கள் காணப்படுகின்றன. ஈமத் தாழிகளும் கிடைக்கின்றன. இங்கு மட்கலக் கிண்ணங்கள், மூடிகள், சுடுமண் பொம்மைகளும் கிடைத்துள்ளன. மேலும் அரிய கல் மணிகளும், தங்கத்திலான ஒரு சிறிய மென்தகடும் கிடைத்துள்ளன.

இவ்வூரை அடுத்துள்ள மேலப்பட்டி மற்றும் ஒத்தகாடு ஆகிய ஊர்களில் சுடுமண் பொம்மைகளும், கண்ணாடி மணிகளும், உயர் வகைக் கல் மணிகளும் கிடைத்துள்ளன.