ஸ்கந்த குப்தர் காசுகள்

முனைவர் மா.பவானி
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

காலம்: பொ.ஆ. 455 - 467

ஸ்கந்த குப்தர் காசுகளில் ஒரு புறம் வெறும் தலையுடன். இருபுறம் காலை விரித்து கொண்டிருப்பது போன்றும். வேஷ்டி தரையில் பிறழ்வது போன்றும் உள்ளது. அரசர் காது, கழுத்து, கைகளில் ஆபரணங்கள் அணிந்துள்ளார். அரசர் தமது இடது கையில் வில்லும் வலது கையில் அம்பும் வைத்துள்ளார். கையில் கருடத்தவஜம் உள்ளது. அரசரின் வலது கையில் ஸ்கந்த என்ற வாசகம் உள்ளது. ''பார்ஹிதகரி ராஜ ஜயதி திவம் ஸ்ரீ க்ரமாதித்ய'' வாசகம் பிராமி எழுத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பெற்றுள்ளது..

பின்புறம்

அமர்ந்த நிலையில் லக்ஷ்மி. இடது கை இடுப்பிலும் வலது கை மூக்கிலும் உள்ளது. க்ரமாதித்யா என்ற வாசகம் உள்ளது.

இவ்வகை தங்கக் காசுகள் மட்டுமின்றி, இவர் வில் வளைப்பது போன்றும், அரசர், அரசி காசுகள், சத்ர வகை, குதிரை சவாரி செய்வது போன்ற நான்கு வகைக் காசுகளை வெளியிட்டுள்ளார். அது போல் கருடன், காளை, பலிபீடம், மத்யதேச போன்ற வகைக் காசுகளையும் வெளியிட்டுள்ளார்.

எடை

இவர் தமது தந்தை குமார குப்தரைப் பின்பற்றி தினாரா எடை அளவிலேயே 8கிராம் உள்ள தங்கக் காசுகளை முதலில் வெளியிட்டுள்ளார். பின்னர் அதிக எடையளவுள்ள அதாவது 9.16 கிராம் எடை அளவுள்ள தங்க தினாராக் காசுகளையும் வெளியிட்டுள்ளார். இவரது பிற்காலத்திய காசுகள் அனைத்தும் வில்லாளிக் காசுகளே ஆகும். இதே காசுகளையே இவருக்குப் பின் வந்த அனைத்துக் குப்த அரசர்களும் பின்பற்றியுள்ளனர்.

உலோகம் : தங்கம், வெள்ளி

எழுத்து : பிராமி

மொழி : சமஸ்கிருதம்