சுசீந்திரம்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராகும் இது. இந்து மதத்தின் முக்கடவுள்களுக்கு எடுக்கப்பட்ட ஆலயத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

அமைவிடம்

இது மதுரைக்கு தெற்கே 247கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலுக்கு வடமேற்கே, ஐந்து கி.மீ , தொலைவிலும் சுசீந்திரம் அமைந்துள்ளது.
சுசீந்தரம் தாணுமாலாய சுவாமி கோவில் கோபுரம்

சிறப்பு

இந்து மதத்தின் முக்கடவுள்களான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனுக்குக் கட்டப்பட்ட ஆலயமாகத் தாணுமாலயசுவாமி கோவில் விளங்குகிறது. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றான தாணுமாலய சுவாமி கோவிலில் உள்ள லிங்கம், பிரம்மா மற்றும் விஷ்ணுவையும் தன்னகத்தே கொள்ளும் குறியீடாக உள்ளது. விஷ்ணுவிற்கான ஆலயத்தில் உள்ள திருவுருவம் ஒருவித வெல்லம் மற்றும் கடுகினால் செய்யப்பட்டதாகும்.
சுசீந்தரம் தாணுமாலாய சுவாமி கோவில் கோபுரம்

இந்தக் கோவிலில் உள்ள இசையை எழுப்பும் தூண்கள், ராமன் சன்னிதிக்கு முன்னர் உள்ள நெடிதுயர்ந்த அனுமன் சிலை மற்றும் வசந்த மண்டபத்தில் உள்ள கண்கவர் சிற்பங்கள் அழகிற்கு அழகு சேர்க்கின்றன.
சுசீந்தரம் தாணுமாலாய சுவாமி கோவில் குளமும் மண்டபமும்

இதன் கோபுரம் மிக அழகாகத் திராவிட பாணியில் உள்ளது.

மேலும், இங்கு ஓர் அழகிய குளமும் அதன் நடுவில் ஓர் அழகான மண்டபமும் அமைந்துள்ளது சிறப்பானதாகும்.