தாதப்பட்டி நெடுநிலைக் கல்

முனைவர் மா.பவானி
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் துறை

அமைவிடம் : திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டை வட்டம் - விவசாய நிலத்தில் கிடைத்த துண்டுக் கல்வெட்டு

கல்வெட்டுப் பாடம்: அடியோன் பாகற்பாளிய் கல்

சிறப்புகள் (தாதப்பட்டி நடுகல்):

சங்கத் தமிழ் இலக்கியங்களில் உள்ள நடுகல் பற்றிய செய்திகள் (எழுத்துடை நடுகல், கூறுளி குயின்ற கோடுமா எழுத்து ) உண்மையே என மெய்பித்தது. இதுவரை அவை ஓவியங்களைக் குறிக்கின்றன வரி வடிவங்களை அல்ல என்ற கருத்தும் நிலவியது.
இதுநாள் வரை கி.பி 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துப் பொறிக்கப்பட்ட இருளப்பட்டி நடுகல் கல்வெட்டே காலத்தால் முந்தியது என்ற கூற்று மாற்றப்பெற்றுள்ளது.
நெடுநிலைக் கல்லில் எழுத்துக்கள் கிடைத்திருப்பினும் இதுவே முதல் முறையாகும்.

மேலும் சில செய்திகள்:

180 செ.மீ. உயரமும் 60 செ.மீ அகலமும் கொண்டது.. இதன் தொடக்கப்பகுதி உடைந்துள்ளதால் தொடக்க எழுத்துக்களை அறியஇயலவில்லை. '' ...ன் அடியோன் பாகற்பாளிய் கல் ''என்று பொறிக்கப்பெற்றுள்ளது. ஒரு தலைவனின் (தலைவனின் பெயர் உடைந்துள்ளது) அடியோன் ஆகிய பாகல் என்பவர்க்காக எடுக்கப்பெற்ற கல், என்பதே இதன் பொருள். ''அடி ஓன்'' என்பதை அடிமக்களைக் குறிக்கலாம் என ''அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்'' என்ற தொல்காப்பிய நூற்பாக்கொண்டு (தொல் :25) ஊகிக்கிறார் கா. ராஜன்.