திருவேங்கைவாசல்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

புதுக்கோட்டைக்கு அருகே அமைந்த இந்தச் சிறிய ஊர், சோழர் காலத்தின் சிறப்புமிக்க கோவிலைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

அமைவிடம்

இது புதுக்கோட்டையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

சிறப்பு

வியாகபுரீஸ்வரர் கோவில் என்ற சிவன் கோவில் சோழர்களால் கட்டப்பட்டு பாண்டியர்களால் புதுப்பிக்கப்பட்டதாகும். கருவறையும், அர்த்தமண்டபமும் மகாமண்டபமும் கொண்ட இக்கோவிலில் தனியே அம்மன் சன்னதி உள்ளது. இங்குள்ள 15 கல்வெட்டுகளில் இராஜராஜ சோழனின் கல்வெட்டு காலத்தால் பழமையானதாகும். இது, இங்குள்ள இறைவனை, “திருமேற்றளி பெருமான்” எனக் குறிப்பிடுகிறது. மேலும் இராசேந்திர சோழன், இரண்டாம் இராசாதிராசன் மற்றும் மூன்றாம் இராசாராச சோழனின் கல்வெட்டுகளும் கிடைக்கப்பெறுகின்றன. இக்கோவிலின் விழாக்களில் சாந்திக் கூத்தியர் நடித்த ‘சாந்திக் கூத்து’ நடைபெற்றதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

மேற்கோள் நூல்

ஜெ.இராஜாமுகமது, 2004. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, சென்னை, அரசு அருங்காட்சியகம்.