தொகரப்பள்ளி

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்

தொகரப்பள்ளி ஒரு புதிய கற்கால மக்கள் வாழ்ந்த இடமாகும்.

அமைவிடம்

இவ்வூர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி வட்டத்தில், கிருஷ்ணகிரியிலிருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இவ்வூர் மலைப்பாங்கான சூழ்நிலையில் உள்ளது.

தொல்லியல் சான்றுகள்

இங்கு புதிய கற்காலத்தைச் சேர்ந்த மெருகேற்றப்பட்ட கற்கோடாரிகள் கிடைத்துள்ளன. இவ்வூரின் வடக்கே உள்ள மலையின் அடிப்பகுதியில் பி.நரசிம்மையா அகழாய்வு செய்துள்ளார். இங்கு புதிய கற்காலக் கருவிகளும், சிவப்பு நிற, சாம்பல் நிற, பழுப்பு நிற மண்பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

இப்பகுதியில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களான கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இடைக்காலத்தைச் சேர்ந்த நடுகற்களும் கல்வெட்டுக்களும் உள்ளன.

மேற்கோள் நூல்

தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி). 2005 தருமபுரி மாவட்டத் தொல்லியல் கையேடு. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.