ஒயிலாட்டம்
ஒயிலாட்டம் என்பது, ஒரே நிறத் துணியைத் தலையில்
கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி
ஆடும் அழகான குழு ஆட்டம். அழகு, அலங்காரம், சாயல், ஒய்யாரம் எனப் பல பொருள்
தாங்கி நிற்கும் ஒயில் என்ற வார்த்தையே, இவ் ஆட்டத்தின் பெயராகியுள்ளது. |