தாமரை இலை கோழி்
பெரும்பாலும் நீர்நிலைகளில் தாமரை இலை கோழி காணப்படும். கொக்கைப் போல நீண்ட மெல்லிய கால்களைக் கொண்ட பறவை. உடலெங்கும் கருநீலத்திலும் சிறகுகள் மட்டும் வெண்கல நிறத்தில் இருக்கும் அழகிய பறவை. தலையிலிருந்து வெண்மையாக அழகிய பட்டை ஒன்று காணப்படும். வால் பகுதி செம்பழுப்பு நிறம். அலகு மஞ்சள் நிறம். 29 செ.மீ. நீளப் பறவை. இதிலும் பெண் பறவை ஆணைவிடப் பெரிதாக இருக்கும். இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் அதிகம் காணப்படும் பறவை. ஒரு சமயத்தில் கருப்புப் புள்ளிகளுடன் கூடிய வெள்ளை நிற 4 முட்டைகளை இடும். இதன் கூடு பெரும்பாலும் தண்ணீரில் இருப்பதால் மிதந்து கொண்டே இருக்கும். எதிராளி வந்தால் நீருக்குள் மறைந்து கொள்ளும். நீர்வாழ் சிறிய உயிரினங்கள் பிடித்த உணவு. | |