சின்ன தோல் குருவி
சின்ன தோல் குருவி அளவில் மிக சிறியதாக இருப்பதால் பறக்கும்போது சாதாரணக் குருவிகளைப் போலத் தோற்றமளிக்கும். இந்தியா, மேற்கு பாகிஸ்தான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் காணப்படும் பறவை. வெண்பழுப்பு நிற
உடலைக் கொண்ட பறவை. வயிற்றுப் பகுதி மட்டும் வெண்மையாக இருக்கும். சற்றே
நீண்டு கூரான பழுப்பு நிற வாலைக் கொண்டிருக்கும். நீண்ட பழுப்பு நிறக் கால்கள்.
கண்களைச் சுற்றி வெண்ணிற வளையம் ஒன்று காணப்படும். சிறிய வளைந்த கருப்பு
நிற அலகைக் கொண்டிருக்கும். வாய் பகுதியில் காணப்படும் சிவப்பு நிறம் இதன்
அழகுக்கு அழகூட்டும். ஒரு சமயத்தில் 2 முதல் 4 முட்டைகள் வரை இடும். |