தமிழ் மொழி

தமிழ் மொழி (Tamil language)தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும்,ஐக்கிய அரபு அமீரகம்,தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.1997-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி(80 மில்லியன்)மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும் திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

வரலாறு

 

தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுளது.பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன.பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்

 

 

தமிழ் எழுத்துக்கள்

ஒள
க்
கா
கி
கீ
கு
கூ
கெ
கே
கை
கொ
கோ
கௌ
ங்
ஙா
ஙி
ஙீ
ஙு
ஙூ
ஙெ
ஙே
ஙை
ஙொ
ஙோ
ஙௌ
ச்
சா
சி
சீ
சு
சூ
செ
சே
சை
சொ
சோ
சௌ
ஞ்
ஞா
ஞி
ஞீ
ஞு
ஞூ
ஞெ
ஞே
ஞை
ஞொ
ஞோ
ஞௌ
ட்
டா
டி
டீ
டு
டூ
டெ
டே
டை
டொ
டோ
டௌ
ண்
ணா
ணி
ணீ
ணு
ணூ
ணெ
ணே
ணை
ணொ
ணோ
ணௌ
த்
தா
தி
தீ
து
தூ
தெ
தே
தை
தொ
தோ
தௌ
ந்
நா
நி
நீ
நு
நூ
நெ
நே
நை
நொ
நோ
நௌ
ப்
பா
பி
பீ
பு
பூ
பெ
பே
பை
பொ
போ
பௌ
ம்
மா
மி
மீ
மு
மூ
மெ
மே
மை
மொ
மோ
மௌ
ய்
யா
யி
யீ
யு
யூ
யெ
யே
யை
யொ
யோ
யௌ
ர்
ரா
ரி
ரீ
ரு
ரூ
ரெ
ரே
ரை
ரொ
ரோ
ரௌ
ல்
லா
லி
லீ
லு
லூ
லெ
லே
லை
லொ
லோ
லௌ
வ்
வா
வி
வீ
வு
வூ
வெ
வே
வை
வொ
வோ
வௌ
ழ்
ழா
ழி
ழீ
ழு
ழூ
ழெ
ழே
ழை
ழொ
ழோ
ழௌ
ள்
ளா
ளி
ளீ
ளு
ளூ
ளெ
ளே
ளை
ளொ
ளோ
ளௌ
ற்
றா
றி
றீ
று
றூ
றெ
றே
றை
றொ
றோ
றௌ
ன்
னா
னி
னீ
னு
னூ
னெ
னே
னை
னொ
னோ
னௌ