கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

மேற்கு மலைத் தொடர்களோடு ஒப்பிடும்போது கிழக்கு மலை தொடர்கள் தொடர்ச்சியற்ற மலைகளாகக் காணப்படுகின்றன. இம்மலைகளின் சராசரி உயரம் 1100மீ முதல் 1600 மீ வரை ஆகும். கிழக்கு மலைத் தொடர்களில் உயர்ந்த மலை சேர்வராயன் மலை. இதன் உயரம் 1500 மீ முதல் 1600 மீ வரை ஆகும். இடைவெளிவிட்டுக் காணப்படும் தனித்த மலைப்பகுதிகள் வடகிழக்கில் இருந்து தென்மேற்காக வேலூர், தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் விரவிக் காணப்படுகிறன. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் மலைகள் என அழைக்கப்படுகின்றது. இம்மலைப்பகுதிகள் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன.