சேர்வராயன் மலை

சேர்வராயன் மலைப் பகுதி தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்திற்கு அருகில் காணப்படும் மலைத்தொடர்ச்சியாகும். இது மலைத்தொடர்ச்சியிலிருந்து விலகித் தனக்கென 400 ச. கி.மீ. பகுதியை ஆக்கிரமித்துள்ளது. வானியர் என்னும் பள்ளத்தாக்கு கிழக்கு மற்றும் மேற்கு மலைகளாக இவற்றைப் பகுக்கின்றன. இது கடல்மட்டத்தை விட 4000 - 5000 அடி உயரம் கூடுதலாகும். இந்த மலையில் இயற்கையின் ஊற்றாக நிறைய மரங்களும், மூலிகைச் செடிகளும், வன விலங்குகளும் இருக்கின்றன.இம்மலையில் காப்பி(Coffee) என அழைக்கப்படும் வணிகப்பயிரும் விளைவிக்கப் படுகிறது. இதனுள் காணப்படும் ஏற்காடு மலை புகழ்பெற்ற சுற்றுலா மையமாகும்.