திருப்பாவை் முனைவர் இரா.மாதவி உதவிப் பேராசிரியர் இசைத்துறை ஆண்டாள் திருப்பாவையானது, தோன்றிய காலந்தொடங்கி பதி வைஷ்ணவ சமூகத்தை வழி காத்திருக்கிறது. வைணவ சமயத்துவம் முழுமையுமே இதனுள் அமைந்துள்ளது என்று பெரியோர் கூறுவர். இராமானுசருக்கு இதனிடமிருந்த ஈடுபாடு காரணமாக அவருக்குத் திருப்பாவை ஜீயர் என்றறொரு பெயரும் உண்டு. இந்நூலுக்குப் பெரியவாச்சான்பிள்ளை செய்த மூவாயிரப்படி வியாக்கியானமும் பிள்ளைலோகாசாரியர் தம்பியான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் செய்த ஆறாயிரப்படி வியாக்கியானமும், சுத்த சத்துவம் தொட்டாசாரியர் செய்த கல்லாபதேசம், வானமாலை ஜீயர் செய்த ஸ்லோபதேசம் ஆகிய நான்கு வியாக்கியானங்கள் பண்டைக்காலத்தே எழுந்துள்ளன. இப்பாசுரங்களின் அருமைப்பற்றி வைணவர்கள் தினமும் ஓதுதற்குரிய பாசுரங்களாகவும் விதிக்கப் பெற்றுள்ளன. ஆண்டாள் பாசுரங்களுக்கு பண்வகுப்பு இல்லை. இராகங்கள் சொல்லபபட்டன. அவையாவன: பாடல் 1 பந்துவராளி, 2,3 காம்போதி, 4,21 தோடி, 5; பூபாளம், 6,7,8 மோகனம், 9; அசாவேரி. 10; சகானா. 11; கேதாரகௌளை. 12; அடாணா. 13,23;சாரங்கா. 14; சௌராஷ்டிரம். 15; யமுனாகல்யாணி. 16,17 சாவேரி. 18; ஸ்ரீராகம். 19; தேசி. 20; பைரவி, 22; பியாசடை. 24; அங்கராபரணம். 25; ஆனந்தபைரவி, 27; தன்யாசி, 28; கல்யாணி, 29; சுருட்டி, 30; ஆக 24 இராகங்கள். இவை பண்ணல்ல. சம்பகாலத்தில் பாடல்களைப் பக்தர்கள் பாடிவந்த இராகங்கள் என்ற அளவே இவற்றுக்குள்ள கட்சி. திருப்பாவை முழுமையும் எந்த இசைக் குறிப்பும் இல்லை. பாடல்களின் தன்மையைக் காண்போம். மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் கடைசிப்பாடலில் ஆண்டாள் தமது பாசுரத்தைச் சங்கத்தமிழ் மாலை முப்பது என்று சொல்வது வரலாற்றுப் பொருளுடையது. திருப்பாவையைச் சிறப்பித்த பழைய தனியன் பாடல்கள் மிக்க பொருள் பொதிந்தவை. |