பொன்னம்பல சுவாமிகள்

(1832 – 1904)

முனைவர் த.கலாஸ்ரீதர்
உதவிப்பேராசிரியர்
ஓலைச்சுவடித்துறை

இவர் தம் தந்தையார் இராமநாதபுர அனுமந்த குடியைச் சேர்ந்தவர். இவர் விஜயபுரத்தில் பிறந்து தமது பதினோராவது வயதில் துறவுக் கோலம் கொண்டார். சிதம்பர சுவாமிகளிடம் வேதாந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். காசிக்குச் சென்று இந்தி, வட மொழிகளைக் கற்றறிந்தார். ஆசிரியரின் மறைவுக்குப் பின்பு கோவிலூர் சிதம்பர மடத்தை நிறுவினார்.

பதிப்பு நூல்கள்

இவர் பிரபோத சந்திரோதயம் என்னும் மெய்ஞ்ஞான விளக்கம் என்னும் பெயருள்ள நூலை 1889 இல் அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். பஞ்சதகி பாடுதுறை முதலிய வேதாந்த நூல்களையும் அச்சுப்படுத்தினார். விசாரசாகரம், என்னும் இந்தி நூலைத் தமிழில் உரைநடையில் மொழிபெயர்த்தார். கைவல்லிய நவநீதம் என்னும் வேதாந்த நூலுக்குத் தத்துவார்த்த தீபம் என்னும் உரை எழுதி அதனை 1898 இல் அச்சிட்டு வெளிப்படுத்தினார். வேதாந்த சூடாமணி, பகவத் கீதை என்னும் நூல்களுக்கு இவர் உரை எழுதியுள்ளார்.