|
வசம்பு
(Acorus calamus)
முனைவர் மரு.பெ.பாரதஜோதி
இணைப்பேராசிரியர்
சித்த மருத்துவத்துறை
- வசம்பு சுட்ட கரியுடன், அதிமதுரப் பொடி
கலந்து கொடுத்து வர குழந்தைகளின் இருமல், காய்ச்சல், வயிற்று வலி தீரும்.
- வசம்பு சுட்ட கரியுடன் தேய்காய் எண்ணெய் கலந்து அடிவயிற்றில் பூசி வந்தால்
வயிற்றுவலி தீரும்.
- வசம்புத் தூளைத் தேனில் குழைத்து காலையில் உட்கொள்ள நாக்குப் பிறழ்ச்சி
(திக்குவாய்) தீரும்.
- வசம்பு ஊறல் குடிநீர் 15 மி.லி கொடுக்க, செரிமானமின்மை, வயிற்றுப் பொருமல்
தீரும். ஊழி நோயால் (Cholera) உண்டாகும் கழிச்சலுக்குச் சிறந்த மருந்தாகும்.
- வசம்புப் பொடியை 150 மி.கி அளவு உட்கொண்டு வந்தால் நரம்புத் தளர்ச்சியை
நீக்கும்.
- வசம்புடன் காய்ச்சுக் கட்டியை நீர் விட்டு அரைத்துப் பற்றிட நாட்பட்ட கீல்வாத
நோய்கள் தீரும்.
|