அவுரி வேர்
முனைவர் மரு.பெ.பாரதஜோதி
இணைப்பேராசிரியர்
சித்த மருத்துவத்துறை
வேறு பெயர்கள்
: நீலி, அவிரி
ஆங்கிலப் பெயர் : Indian indigo Plant
தாவரவியல் பெயர் : Indigofera tinctoria .
செய்கைகள்
வெப்பமுண்டாக்கி
- Stimulant
நுண்புழுக்கொல்லி - Germicide
முறை வெப்பகற்றி - Antiperiodic
மருத்துவப் பயன்கள் :
- அவுரி வேரைக் குடிநீரிட்டுக் கொடுத்துவர
எல்லா நஞ்சுகளையும் முறிக்கும்.
- அவுரி வேர்ப்பட்டையை மிளகு மற்றும் பெருங்காயத்துடன் அரைத்துக் கொடுத்துவர
கட்டிகள் தீரும்.
- அவுரி வேர், மிளகு, வெற்றிலை இவற்றை அரைத்துக் கொடுத்தால், எட்டிக் கொட்டை,
நேர்வாணம் போன்ற பொருட்களால் ஏற்பட்ட நஞ்சுகள் தீரும்.
- அவுரி வேர், அறுகம்புல், மிளகு இவை மூன்றையும் சேர்த்து நன்கு அரைத்துக்
கொடுக்க தேள் மற்றும் பூரான் கடித்த விடங்கள் தீரும்.
|