ஊமத்தை்

முனைவர் மரு.பெ.பாரதஜோதி
இணைப்பேராசிரியர்
சித்த மருத்துவத்துறை

வேறு பெயர்கள் : உம்மத்தை

ஆங்கிலப் பெயர் : Thorn apple

தாவரவியல் பெயர் : Datura metel.

செய்கைகள் (Actions)

வாந்தியுண்டாக்கி - Emetic
இசிவகற்றி - Antispasmodic
துயரடக்கி - Anodyne
மூர்ச்சையுண்டாக்கி - Norcotic

மருத்துவப் பயன்கள் :

- இலை உமிழ் நீரைக் கட்டுப்படுத்தவும், பசியைக் குறைக்கவும், உணர்ச்சியைப் போக்கவும் பயன்படுகிறது.

- ஊமத்தை இலைச்சாறுடன் சமஅளவு தேங்காய் எண்ணெய் கலந்து எரித்து தைல பாகத்தில் எடுத்து, காதுவலிக்கு 2 துளி காதில் விட்டு வர தீரும்.

- இலையை உலர்த்திப் பொடித்து 100 மி.கி அளவு உள்ளுக்குக் கொடுக்க இரைப்பு (Asthma) தீரும்.

- இலையை வதக்கி ஒற்றடமிட, கீல்வாயு, எலும்பு வீக்கம், கட்டிகளால் ஏற்படும் வலி போன்றவை நீங்கும்.

- ஊமத்தை இலைச் சாற்றைத் தயிரில் 10 துளி கொடுக்க வெள்ளை தீரும்.

- இலைச்சாறு, தேங்காய் எண்ணெய், மயில் துத்தம் சேர்த்து செய்யப்படும் மத்தன் தைலம் புண், புரைகளை நீக்கும். நீரிழிவு நோயில் ஏற்படும் ஆறாத புண்களைக் குணப்படுத்தும்.

- நாய்க்கடியால் ஏற்பட்ட புண்ணுக்கு ஊமத்தையிலிருந்து சிறந்த மருந்து தயாரிக்கப்படுகிறது.