பாகல்
(Momordica charantia)

முனைவர் மரு.பெ.பாரதஜோதி
இணைப்பேராசிரியர்
சித்த மருத்துவத்துறை

- கை, கால் எரிச்சல் தீர இலைச் சாறை உள்ளங்கால், உள்ளங்கைகளில் பூசி வர எரிச்சல் தீரும்.

- இலைச் சாறுடன் மஞ்சள் பொடி சேர்த்து சிறிதளவு குழந்தைகட்குப் புகட்ட வயிற்றைச் சுத்தம் செய்யும்.

- இலையை உலர்த்திப் பொடித்து, பெரு நோய் புண்களுக்குத் தூவி வரலாம்.

- இலையைப் பழத்துடன் சேர்த்து காமாலை, குட்டம் போன்ற நோய்களுக்கு வழங்கலாம்.

- இலையின் சாறு அல்லது இலையின் பொடியைத் தினமும் 2 கிராம் உண்டு வந்தால் மதுமேகம் தீரும்.

- இலையை ஆமணக்கு நெய்யுடன் வேக வைத்து வெளி மூலத்தில் வைத்துக் கட்டி வர தீரும்.