பவானி ஆறு பவானி ஆறு, காவிரி ஆற்றின் முக்கிய துணை
ஆறுகளில் ஒன்றாகும். இது தமிழகத்தின் நீலகிரி மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில்
தோன்றி மேற்கு நோக்கி கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பட்டி
பள்ளத்தாக்கில் பாய்ந்து அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில்
120 பாகை திரும்பி கிழக்கு நோக்கி நீலகிரி மாவட்டத்தில் பாய்ந்து மீண்டும்
தமிழகத்துக்குள் வருகிறது. | |