அடிப்படை நிலைப் பாடங்கள்

அடிப்படை நிலையில் தமிழ் எழுத்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. எழுத்துகளின் ஒலி, வரி வடிவங்களை எளிதில் படித்து, எழுதிப்பழகும் வகையில் பயிற்சிகளுடன் பாடங்கள் தரப்பட்டுள்ளன. இப்பாடப்பகுதியில் 14 பாடங்கள் உள்ளன. அவை எளிய வரிவடிவம் கொண்ட எழுத்துகளில் தொடங்கி, கடின வரிவடிவம் கொண்ட எழுத்துகளில் முடியுமாறு அமைக்கப்பட்டுள்ளன. ஒத்த வடிவம் கொண்ட எழுத்துகள் தொகுதிகளாக ஆக்கப்பெற்று ஒவ்வொரு தொகுதியும் ஒரு பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 13-வது பாடத்தில் தமிழ் எழுத்துகளின் அகரவரிசை அறிமுகப்படுத்தப்படுகின்றது. இறுதியில் 16 மழலைப் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்காக மழலைக் கல்வியும், அசைவுப்படக் கதைகளும், அசைவுப்படங்களுடன் மழலைப் பாட்டுகள் பலவும் கொடுக்கப்பட்டுள்ளன (படம்).