தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, கலை ஆகிய துறைகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் (Ph.D.) பெற விரும்புவோருக்குத் தேவையான பார்வை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மிகுதியான அளவில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின்நூலகத்தில் இடம்பெறுகின்றன. ஆய்வை வழிநடத்தத் தமிழகப் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரிய வல்லுநர்கள் பலரின் உதவிக்கு வழி செய்யப்படுகிறது. ஆய்வுப் பட்டங்களைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வழங்கும்.